முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Sunday, 12 March 2017

நான். ...யார்...என்ற...தேடல்...

நேர்மறை சிந்தனையின் சக்தி..:-

உங்கள் செயல்களில் எல்லாம் வெற்றி தேவதை கை கோர்க்க வேண்டுமா ? சாதனைகளை நிகழ்த்த வேண்டுமா,? பிசினசில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமா...நீங்க யாரிடமும் சென்று என் எதிர்காலம் எப்படி இருக்கும் என கேட்க வேண்டாம். உங்கள் எண்ணங்களே உங்கள் எதிர்காலம். என்ன ஆச்சர்யமா இருக்கா.. உண்மைதான். நான் என்னவாக ஆக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வண்ணமே ஆக முடியும். எண்ணிய முடிதல் வேண்டும்.. நல்லவே எண்ணல் வேண்டும். இதுதான் டெக்னிக்..

நம் எல்லாரின் தலை மீதும் தேவதைகள் உலா வந்து சுற்றிக் கொண்டிருக்குமாம்.. நாம் என்ன நினைக்கிறோமோ அல்லது சொல்கிறோமோ அப்போதெல்லாம் ததாஸ்து என சொல்லுமாம். ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என அர்த்தமாம். எனவே நல்லதையே சிந்தி. நல்லதையே சொல் . நல்லதையே செய்.. இதுதான் உத்தி. WORDS, THOUGHTS AND DEEDS எல்லாம் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது நீங்கள் நினைத்ததை செய்ய வழிமுறை பிறக்கும். செய்யும் ஆற்றல் பிறக்கும். அதற்கு அனைவரும் துணைபுரிவார்கள். அந்தச் செயல் இலகுவாய் நிறைவேறும்.

இதேதான் எதிர்மறை சிந்தனையாளர்க்கும். இது நடந்து விடுமோ, இப்படி ஆகி விடுமோ, தோற்று விடுவோமோ என்று நினைத்துக் கொண்டிருப்பதன் மூலம் எதிர் சக்திகளை தூண்டி அந்தச் செயல் நிகழ நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ காரணமாகி விடுவார்கள். எந்த செயலிலும் ஈடுபட்டு வெற்றி காண வேண்டும் என நினைப்பவர்கள் இந்த மாதிரி எதிர்மறை சிந்தனையைத் தூண்டும்படி பேசும் நபர்களை கிட்டயே அண்ட விடாதீர்கள். அதற்காக காக்காய் பிடிப்பவர்களையும் வைத்துக் கொள்ள வேண்டாம். இவர்களால் நீங்கள் உங்களைப் பற்றிய அதிகப்படியான மதிப்பீட்டில் செயலை ஒழுங்காய் செய்யும் திறனழிந்து தன்னைப் பற்றிய சுய மதிப்பீட்டை அதிகரித்து அவதிப் படுவீர்கள்.

நான் யார் என்ற தேடல், இப்போது என்னால் என்ன செய்ய முடியும், நான் என்னவாக ஆக நினைக்கிறேன் அதற்கு என்னென்ன வழிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும். ஒரு தொழிலதிபரோ, அரசியல்வாதியோ, ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கும் மாணவனோ, திடீரென வந்து விட முடியாது. எதற்கும் திட்டமிடலும், முறையான பயிற்சியும், இடைவிடாத முயற்சியும் வேண்டும். தாழ்வு மனப்பான்மையோ உயர்வு மனப்ப்பான்மையோ கூடாது. நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தக்க நபர்களையும், நிகழ்வுகளையும் மனம் கண்டுபிடிக்கும்.

நாம் பொதுவாக நம் மனத்தில் குறைவான பகுதிகளையே பயன்படுத்துகிறோம். மிக அதிகமான புத்திசாலிகள் என்று கருதப்படுபவர்கூட மனதில் 18 சதவிகிதம்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். நம் மனம் இந்தப் பிரபஞ்சம் போல விசாலமானது. ஒவ்வொரு படியாக முன்னேற்றிக் கொண்டே செல்லும் திறனுள்ளது.

நேர்மறை சிந்தனை எல்லா நல்லவைகளையும் கண்டுபிடிக்கும். இது தெய்வத்திற்கு ஒப்பானது. எதிர்மறை சிந்தனை அனைத்து அழிவுகளையும் கொண்டுவரும். இது சாத்தானுக்கு ஒப்பானது. அழிவு சக்தியை விடுத்து ஆக்க சக்தியை மட்டும் பயன்படுத்த மனதைப் பண்படுத்துதல் முக்கியம். நம் ஒவ்வொருவரைச் சுற்றியும் ஓரா (AURA) என்ற ஒரு ஒளிவட்டம் உண்டு. அந்த ஒளிச் சக்தி டிஸ்டர்ப் ஆகும்போது நோய் நம்மைப் பீடிக்கிறது. ஆரோக்கியமான சிந்தனையும், ஆரோக்கியமான உணவும் மனிதனை நோயிலிருந்து காப்பாற்றுகிறது.

இந்த ஆரோக்கியமான சிந்தனைகளை நாம் பெற முதலில் நல்ல புத்தகங்கள், பின் நல்ல உணவு. நல்ல பழக்க வழக்கங்கள் பின் யோகா தியானம் போன்றவை உதவுகின்றன. எண்ணங்களை ஒழுங்கு படுத்துதல் ஓரிடத்தில் குவித்தல், மையத்திலிருந்து விலகாமல் நமக்கு வேண்டியவற்றை நியாயமான முறையில் பெற சிந்தித்தல் போன்றவை நேர்மறை சிந்தனையின் பயிற்சிகளாகும். இவ்வாறு குவிக்கப்பட்ட எண்ணமானது நம் உள் மன ஆசைகளை அலசி ஆராய்ந்து அதை செயல்படுத்தும் வழிமுறைகளைக் கண்டுணருகிறது. அதை செயல்படுத்த யாருடைய உதவி தேவை அல்லது பயிற்சி தேவை என உணர்த்துகிறது. அதன் படி விடாமுயற்சியோடு போராடுபவன் நீரில் விழுந்து நீச்சல் கற்றுக் கொள்வதுபோல கற்பிக்கிறது. ஜெயிப்பது என்பதன் பலபடிகளைக் கடந்து ஜெயித்தபின் அந்த அனுபவமே தெய்வமாகிறது.

இமயமலையில் ஏற வேண்டுமானாலும் சரி, ஏரோப்ளேன் ஓட்ட வேண்டுமானாலும் சரி, நம்மால் முடியும் என்பதை முதலில் நம்புங்கள். நம்பியவற்றை செயல்படுத்த நேர்மறை எண்ணங்களின் உதவியை நாடுங்கள். எண்ணம் போல வாழ்வு என்ற சொல்லுக்கு ஏற்ப எவ்வளவு உயரம் எட்ட விரும்புகிறீர்களோ அந்த உயரத்தை உங்களால் சுலபமாக எட்ட முடியும். நேர்மையான முறையிலேயே.. இதுதான் முக்கிய தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம். எப்போதும் ஜெயிப்போம் என்றே நினைத்து ஈடுபடுங்கள். .

தெ. இரவிச்சந்திரன்🙏

படித்ததில் பிடித்தது...

ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்காக...

1 comment: