அவசியம் படிக்கவும்.
பகிரவும்.
உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?
ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.
அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம்.
அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது.
எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.
எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது.
நித்து என்பவர் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும்.
அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன்.
வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார்.
“தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட்.
எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை.
இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான்.
அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம்.
அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.
கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன்.
சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல.
அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார்.
முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம்.
என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.
திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது.
பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும்.
இருமல் ஆரம்பிக்கும்.
மயக்கம் ஏற்படும்..
அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள்.
நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம்.
மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன்.
மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார்.
“பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது.
அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு.
எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம்.
வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார்.
இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது.
ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் :
எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.
தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன.
அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு.
காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.
படித்தேன் பகிர்ந்தேன்....மகிழ்ந்தேன்...
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteமுக்கியமான தகவல்...
ReplyDeleteமிகவும் நன்றி ஐயா...