முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Saturday, 4 March 2017

உன் வாழ்க்கை உன் கையுல்...

நீயே உனக்கு எஜமான் -
தன்னம்பிக்கை கதை:

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவருக்கும் ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார், அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது, பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும் என்ற எண்ணமும் ,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்ற எண்ணமும் ஒவ்வொருக்குள்ளும் சுழன்றபடியே இருந்தது. சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம், உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும். ஒவ்வொருவர் முன்னேற்றத்துக்கும் அவர்கள் தன்னம்பிக்கையே காரணம்...உன்னை தவிர உன் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்....மாலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment