முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Friday, 31 March 2017

முகவரி......கவிதை...

முகவரி
%%%%%

முகவரி தேடி
ஓடி அலைகிறோம்
வாழ்வில் நித்தம்
தலையில்லா தபாலாய்...

@@@@@@@@@@

சான்று...
₹₹₹₹₹₹₹
முகவரி வாழ்வின்
நிகழ் காலத்தை
பொறித்து வைக்கும்
வரலாற்று சான்று...

@@@@@@@@@@@

பாலம்
%%%%%%

முகவரி உறவையும்
நட்பையும் இணைக்கும்
அன்பு பாலம்
குடியும் கூத்துமாய்...

@@@@@@@@@
கல்லறை
%%%%%%%

முகவரி தொலைத்தோன்
வாழ்வை இழந்தோன்
முடிவில் கல்லறையின்
முகவரி தேடி....
@@@@@@@

நட்புடன் ஆ.சிவா...சேலம்

நி.மு.420






விசாலம்..சிறு கதை...

💥 *மனதை விசாலமாக்குங்கள்*💥

🔵புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார்.
அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான்.
வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாகக் கேட்டார்:

🔵சகோதரா, ஏன் இப்படிக் கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு ஏற்பட்ட பிரச்னையை என்னிடம் சொல்.
“”பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன்.
எடுத்த எதிலும் தோல்வி. தாங்க முடியாத துயரம்.
ஆதரவுக்கென்று எனக்கு யாருமில்லை.
என் மனது மிகவும் பலவீனமாகப்
போய்விட்டது.
எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

🔵புத்தர் அன்புடன் அவன் கையில் தண்ணீர்க் குவளையைக் கொடுத்தார்.
பிறகு உப்பையும் கொடுத்து விட்டுச் சொன்னார்: “”சகோதரா, இந்தச் குவளையில் உப்பிட்டுக் கலக்கி அருந்து.”

🔵அவன் உப்பைக் குவளையில் இட்டுக் கலக்கி அருந்திப் பார்த்தான். இரண்டு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது. மேற்கொண்டு குடிக்க முடியாமல் அப்படியே கீழே வைத்து விட்டுச் சொன்னான்:
என்னால் இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை பகவானே. மிகவும் கரிக்கிறது.”

🔵புத்தர் மீண்டும் இதோ இப்போதும் அதே அளவு உப்பைத் தருகிறேன்.
இதை நீ எதிரில் இருக்கும் அதோ அந்தக் குளத்தில் கரைத்துவிடு!”

🔵புத்தர் சொன்னபடியே அவன் அந்த உப்பை எதிரிலிருந்த குளத்தில் கரைத்தான். :
இப்போது அந்தக் குளத்து நீரைக் குடித்துப் பார்.”

🔵உப்புக் கரைக்கப்பட்ட போதும் குளத்து நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூடத் தெரியவில்லை.
அந்த இளைஞன் போதுமான அளவு நீர் குடித்துவிட்டுக் கரைக்கு வந்தான்.

🔵நீ சிறிய குவளையில் இருந்த நீரிலும், பிறகு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான்.
ஆனால் சிறிய குவளையில் தண்ணீர் கொஞ்சம் தான் இருந்தது.
அதனால் தான் கரிப்புச் சுவை அதிகமாக இருந்தது.
எனவே உன்னால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.
ஆனால் இதே உப்பு குளத்து நீரில் கரைக்கப்பட்டிருந்தாலும்,
அந்த நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூடத் தெரியவில்லை..

🔵நம் துன்ப துயரங்கள் என்பவை உப்பைப் போலத் தான். இவை வாழ்க்கை நெடுகிலும் வந்து கொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கவே முடியாது.
ஆனால் நம்மால் நம் மனதை விசாலமாக்க முடியும்.
இப்போது உன் மனது அந்தச் சிறிய குவளையைப் போல் தான் இருக்கிறது.
அதனால் தான் வாழ்க்கைச் சிரமங்கள் உனக்கு இந்தளவு துயரமளிக்கின்றன.

🔵நீ நிறைய அறிவும் அனுபவங்களும் பெற்று உன் மனதைப் பெரிதாக்கு.
அதை வலுப்படுத்து.
அப்போது உன் துயரங்கள் குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப் போலக் காணாமல்
போய்விடும்.
அந்தத் தெளிந்த நிலையில் தான் புதிய வழிகள் புலனாகும்.
அவ்வழிகளில் நீ உயர்வடைவாய்.”.

Friday, 24 March 2017

வானவில்....கவிதை

வானவில்
&&&&&&&&

வானவில் நிறங்களின்
அணிவகுப்பு இன்பம்
துன்பம் கோபம்
மனிதனின் நிறமோ?...

பெட்டகம்
₹₹₹₹₹₹₹₹₹

வானவில் கண்ணுக்கு
அழகு கருத்துக்களின்
அறிவு பெட்டகம்
வாழ்வின் அர்த்தம்...

கலர் ஒவியம்
₹₹₹₹₹₹₹₹

வானவில் சூரியனுக்கு
எதிரி மழையின்
நண்பன் குழந்தையின்
எண்ணத்தில் ஒவியமாய்...

முதல் கண்டுபிடிப்பு
@@@@@@@@@

வானவில் அறிவியலின்
அசத்தல்  முப்பரிமாணம்
என்ற இயற்கையின்
முதல் கண்டுபிடிப்பு....

அஜந்தா
₹₹₹₹₹₹₹
வானவில் இயற்கை
வண்ணங்களை குழைத்து
வரைந்த அழிக்க
முடியா அஜத்தாவோ?.....

நட்புடன் ஆ.சிவா...சேலம்....
நி.மு.420

Wednesday, 22 March 2017

பனை மரத்தின் சிறப்பு...

நம் முன்னோர்கள் எதற்காக வயல் வெளிகளின் ஓரமாக பணை மரங்களை நட்டு வைத்தார்கள் தெரியுமா?

பனைமரத்தை நாம் ஒரு வறட்சித் தாவரம் என்று நினைக்கிறோம். அதற்கேற்ப வறண்ட பகுதிகளில் தான் இவை அதிகம் காணப்படும். பனைமரம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக சமீபத்தில் நடத்திய சில ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவில் 10.2 கோடி பனை மரங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி உள்ளன. இவற்றில் 2.5 கோடி மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம், சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் இந்த மரங்கள் அதிகம். பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. நமது முன்னோர்கள் மக்கள் வாழும் எல்லா பகுதிகளிலும் ஏகப்பட்ட குளங்களையும் கண்மாய்களையும் வெட்டினர். இப்படி குளங்களை வெட்டினால் மட்டும் நீர்மட்டம் உயர்ந்து விடாது.
நீர்மட்டம் உயர சில மரங்கள் உதவி செய்கின்றன. அத்தகைய மரங்களில் ஒன்றுதான் பனை மரம். நீர்மட்டத்திற்கு உதவுவதால்தான் நமது முன்னோர்கள் குளங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கில் பனை மரங்களை வளர்த்தனர். பொதுவாக எல்லா மரங்களுமே அதன் வேர்களை பக்கவாட்டில் மட்டுமே பரப்பும். பனை மரம் மட்டும் தனது வேர்களை பக்கவாட்டில் பரவவிடாமல் செங்குத்தாக நிலத்தடி நீர் செல்லும் வழிப்பாதையை தேடிச் செல்லும். வேரை குழாய் போல மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு வரும். இதனால் பூமியின் அடிப்பகுதியில் இருக்கும் நீரை மேலே கொண்டு வந்து விடுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் வழிப்பாதையில், நீர் நிரம்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் கலக்கும். அதோடு மட்டுமில்லாமல் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது பனை மரங்கள்.

#மரம் #நடுவோம்
#மழை #பெறுவோம்

#பனைமரம் #அதிகம் #நடுவோம் !!
#இயற்கையைகாப்போம் !!
#நீர்வளத்தை #பெருக்குவோம்

Sunday, 19 March 2017

சிட்டு குருவி தினம்....


உலக சிட்டுக்குருவிகள் நாள்

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

மனிதரைச் சுற்றியுள்ள பொதுவானஉயிரியற் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.

2010 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" (We will save our House Sparrows) என்பதாகும்.

அழியும் குருவிகள்

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும்சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில:

வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.

எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல்கழிவுப் புகையால், காற்றுமாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.

வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிதெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.

அலைபேசிகளின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது

நன்றி

விக்கிப்பீடியா....

Saturday, 18 March 2017

மனித நேயம்....

நெஞ்சை உருக்கிய நிகழ்வு...
""""""""""""""""""""""""""""""""""
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத்  தேடி அமர்ந்தேன்..

விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து நம் இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்.. 
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..

எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி ...

ஒரு மணி நேரம் சென்றிருக்கும்..
அப்பொழுது ஒரு அறிவிப்பு..

மதிய உணவு தயார்.. சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது...எனக்கு பின்னால் இருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உ டைந்து போ னேன்..

ஏன்...சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும்.. அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவாக இருக்கும்

ஆமாம்..உண்மை.

இதை கேட்ட பொழுது.... மனது மிகவும் வலித்தது...உடனே
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..

அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..

நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்...நான் வெட்கப்படுகிறேன் எனக்கூறி இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளை பிடித்து குலுக்கி,  இது  ஒரு மிகப்பெரிய கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே என்று சொல்லி சென்றார்.

ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..

விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...

இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..

காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்...

இந்த இளம் வீரர்கள் குடும்ப பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு..தன்னடைய  உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை பாது காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...
இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள்
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடுவதுடன் அவர்களை தெய்வங்களாகவும் பூஜிப்பதுடன்.அவர்களுக்காக கோயில் கட்டி வணங்குவது போன்ற செயல்களால் தங்களது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கின்றர்கள்..என்பது
மிகுந்த வேதனை...

கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,
ஓட்டு போட்ட மக்களை  ஏமாற்றும் அரசியல்வாதிகள்...மற்றும் லஞ்சம்  வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை  நினைத்துக்கூட  பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது....

எம் தேசத்து என் இளைஞனே..என் சகோதரனே...
நம் தேச நலன் காக்க
வெளியே வா.....

ஜெய் ஹிந்த் *

நெஞ்சை நெகிழ செய்த செயல் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நட்புகளே.....
நன்றி.....

Friday, 17 March 2017

பணம் .....சிறுகதை

🌼பணம்
ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

🌼பிச்சைகாரன்..

🌼சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.”

🌼“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

🌼“வேறு ஒண்ணா…? ஏதுவா இருந்தாலும் சரி என் பிரச்னை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

🌼“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

🌼“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா

🌼ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

🌼“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

🌼“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

🌼“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

🌼அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

🌼“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

🌼“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

🌼“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

🌼இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

🌼ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

🌼புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

🌼ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

🌼அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட  பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

🌼அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

🌼ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

🌼இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.

🌼ஆண்டவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

🌼ஆண்டவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

🌼ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.

🌼இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

🌼இறைவனை வணங்குவதோ, பதிகங்களை படிப்பதோ, கோவிலுக்கு செல்வதோ, உழவாரப்பணி முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ – இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

விட்டில். பூச்சி....

குட்டி கதை.

சூரியன் கண்ணை முட ,நிலா விழித்துக்கொள்ளும் நேரம்.

அரா கையில் அகல் விளக்குடன்,
வீட்டின் வாசலில் அகல் விளக்கின் ஒளியை பார்த்தவரு இருந்தாள். தூரத்தில் இருந்து வந்த விட்டில் பூச்சிகள் ஒவ்வொன்றாக ஒளிக்குள் சென்று மறைந்து  கொண்டே இருந்தது.
அரா ஒரு பூச்சியிடம் கேட்டாள் .
இது என்ன பைத்தியக்கார தானம் என்று. அதற்கு  ஒரு விட்டில் பூச்சு ,
இதுவே எங்கள் கனவு என்று சொல்லியவாரு ஒளிக்குள் மறைந்தது....

வாழ்வின் அர்த்தம் கற்பிக்கும் விட்டில் பூச்சி....

நன்றி

கதைசொல்லி குமார்ஷா..

பிட்டுக்கு மண் சுமந்த பாடம்....

பழியைச் சுமத்துபவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!!!

பிட்டுக்கு மண் சுமந்த கதையும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதுதான்.... பரியை நரியாக மாற்றிய சிவபெருமான், அரிமர்த்த பாண்டியன், மாணிக்கவாசகருக்குத் தண்டனை தந்தது குறித்த உண்மை நிலையை உணர்த்த, வைகையாற்றில் வெள்ளம் வரச்செய்கிறார்....
வெள்ளமோ கரையை உடைத்துக்கொண்டு ஓடுகிறது..... மீண்டும் வெள்ளம் வராமல் இருக்க, கரையை உயர்த்தும் பணியில் மக்களை மன்னன் ஈடுபடச் செய்கிறான்....
பிட்டு தயாரிக்கும் பெண்மணி, தனக்கு வாரிசு இல்லாததால் யாரை தன் சார்பாக வேலைக்கு அனுப்புவது என்று குழம்பி நிற்கும்போது, சிவபெருமான் இளைஞனாக வருகிறார்.....

அவர் கூலியாக பிட்டைச் சாப்பிட்டுவிட்டு, மண் சுமப்பதாக ஒத்துக்கொள்கிறார்....
வேலையைப் பார்வையிட மன்னனே வருகிறான்....
இளைஞன் வடிவில் வந்த சிவபெருமானோ தாறுமாறாகப் பணியைச் செய்ய, கோபமடைந்த பாண்டிய மன்னன், அவர் முதுகில் பிரம்பால் ஓர் அடி வைக்கிறான்.....
அந்த அடி மன்னன் உட்பட அனைவரின் முதுகிலும் விழுகிறது.... 
மன்னன் உண்மையை அறிந்தான்....

இது வெறும் பொழுதுபோக்குக் கதையல்ல, அரிய உண்மையை வித்தியாசமாக நமக்கு உணர்த்துகிற கதை....
நாம் யார் மீது அடித்தாலும்,அந்த அடி நம்மையே வந்து அடையும்...
நாம் யாருக்கு எந்தத் தீங்கு செய்தாலும், அது நம்மையே வந்து தாக்கும் என்பதையே மிக நேர்த்தியாக இந்தத் திருவிளையாடல் கதை நமக்குத் தெரிவிக்கிறது....
அடுத்தவர்கள்மீது கூச்சப்படாமல் பழியைச் சுமத்துபவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதுதான் ஆன்மிகவாதிகளும் புராணங்களும் நமக்குத் தொடர்ந்து உணர்த்துகிற பாடங்கள்!!!

திருச்சிற்றம்பலம்