வெங்காயத்தாள் கூட்டு தேவையான பொருட்கள் : பொருள் - அளவு வெங்காயத்தாள் 1 கட்டு (நறுக்கியது) பாசிப்பருப்பு 50 கிராம் துவரம்பருப்பு 100 கிராம் சாம்பார் பொடி அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள்பொடி அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் 3 வெங்காயம் கால் கப் உப்பு தேவைக்கேற்ப பால் அரை கப் கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் எண்ணெய் தேவைக்கேற்ப செய்முறை : துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் அதில் வேகவைத்த பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கொதிக்கவிடவும். வெங்காயத்தாள் வெந்தவுடன் பால் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். இப்போது சூடான வெங்காயத்தாள் கூட்டு ரெடி. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கூட்டுடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
நன்று. வெங்காயத் தாள் போட்டு இது வரை எதுவும் சமைத்ததில்லை.
ReplyDeleteசெய்முறை செய்து விட்டு சொல்கிறேன் ஐயா...
ReplyDeleteDifferent type. Thanks
ReplyDeleteநல்ல பதிவு. நன்றி.
ReplyDelete