முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Wednesday, 18 November 2020

புதிய பார்வை...புதிய கோணம்...



அடர்ந்த
ஒரு காடு.

ஒரு ஜோடி
காதல் கிளிகள்
அங்கும் இங்கும்
பறந்து மகிழ்ந்து
வாழ்ந்து கொண்டு
இருந்தன.

ஒரு
கெட்ட நாளில்
கெட்ட நேரத்தில்

ஒரு
ஜோசியக்காரன்
கூட்டில் தனியாக
இருந்த பெண் 
கிளியை அபகரித்து
கொண்டு சென்று
விட்டான்.

மேலும் அந்த 
பெண்கிளியின்
சிறகுகளை
ஒவ்வொன்றாக...

வலிக்க வலிக்க
பிய்த்து அதனை
பறக்க விடாமல்
செய்து விட்டான்.

கொஞ்ச நாள்
சென்றது.

சிறகுகள்
மீண்டும்
முளைக்க
ஆரம்பித்தது.

பெண் கிளி
பறக்க முயற்சி
செய்தது.

இதை பார்த்த
ஜோசியக்காரன்
மீண்டும் சிறகுகளை
பிய்த்து எறிந்தான்.

சிறகுகள்
முளைப்பதும்
பெண் கிளி
பறக்க முயற்சி
செய்வதும்
ஜோசியக்காரன்
இறகுகளை
பிய்ப்பதும்
தொடர்கதை
ஆனது.

ஒரு 
கட்டத்தில்
பெண் கிளி
இனி தன்னால்
பறக்கவே முடியாது
என நினைக்க
தொடங்கிவிட்டது.

இந்த
நேரத்தில்
அந்த பக்கமாக
வந்த ஆண் கிளி 
இதனை கண்டு
பெண் கிளியை
காப்பாற்றி கூட்டி
செல்ல திட்டமிட்டது.

ஜோசியக்காரன்
இல்லாத நேரம் 
பார்த்து அங்கு 
வந்த ஆண் கிளி...

' பறந்து வா
  நாம் தப்பித்து
  செல்லலாம் "

என்று
கூறியது.

" என்னால்
  பறக்க 
  முடியாது...

  நான்
  எத்தனையோ
  முறை முயற்சி
  செய்து தோற்று
  விட்டேன்...

  நான் 
  இறக்க
  தயாராகி 
  விட்டேன்...

  என்னை
  இங்கேயே
  விட்டு விடு "...

என்று 
கூறியது.

இதனை கேட்ட
ஆண் கிளி...

" முட்டாள்
  கிளியே...

  உனக்கு
  சிறகுகள்
  நன்றாக
  வளர்ந்துள்ளது...

  உன்னால்
  பறக்க முடியும்...

  எத்தனை முறை 
  நீ தப்பிக்க 
  முயற்சி செய்தாய்
  என்பது முக்கியம்
  இல்லை...

  இப்போது
  முயற்சி செய்...

  உன்னால்
  பறக்க முடியும்...

  உடன் நான்
  இருக்கிறேன்
  பறந்து வா "...

என 
உற்சாக
வார்த்தைகளை
கூறியது.

இதனை கேட்ட 
பெண் கிளி...

தன்
சிறகுகளை
அசைத்து பார்த்தது.

சிறகடிக்க 
முயற்சி செய்தது.

இறுதியில்
பறந்து சென்றது.

இக்கதை
கூறும் கருத்து
என்ன ???

' எத்தனை முறை
  தோற்றாலும்
  உன் முயற்சியை
  கை விடாதே '

என்பதே
அது.

ஆயிரம் 
முறை
தோற்று...

இறுதியில்
கண்டுபிடிக்க
பட்டது தான்
மின்சார பல்பு.

பலமுறை
இறக்கை கட்டி
பறந்து விழுந்து
அடிபட்டு...
 
இறுதியில்
கண்டுபிடிக்க
பட்டதுதான்
விமானம்.

ஒவ்வொரு
வெற்றிக்கும்
பின்னாக...

ஓராயிரம்
வலிகள்
வேதனைகள்
தோல்விகள்
மறைந்து தான்
இருக்கின்றன.

' முயற்சி
  உடையோன்
  இகழ்ச்சி
  அடையான் '

வாங்க...

நமக்கும்
ஓராயிரம்
கனவுகள்
உண்டு.

முயற்சிகள்
செய்வோம்.

வெற்றி
பெறுவோம்.

' நம்மால்
 முடியாதது
 வேறு யாரால்
 முடியும் ??? '

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

பகிர்வு


Tuesday, 17 November 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

🍁  புதிய பார்வை  🍁

இரு 
கைகளையும் 
தலைக்கு 
மேலே 
உயர்த்தி...

இரு 
கரங்களையும்
கூப்பி 
வணங்குவது...

கடவுளை 
வணங்கும் 
முறை.

நெற்றிக்கு 
நேராக 
கைகூப்பி 
வணங்குவது...

ஆசிரியரை 
வணங்கும் 
முறை. 

உதடுகளுக்கு 
நேராக 
கை குவித்து 
வணங்கும்
முறை...

தந்தையை 
வணங்கும் 
முறை.
 
மார்புக்கு 
நேராக 
கைகூப்பி 
வணங்குவது...

உள்ளத்தால் 
உயர்ந்த 
சான்றோரை
வணங்கும் 
முறை.

வயிற்றுக்கு 
நேராக 
இரு 
கரம் கூப்பி 
வணங்கும் 
முறை...

தாயை
வணங்கும் 
முறை.

இதயத்தில் 
கை வைத்து 
வணங்கும் 
முறை...

நம்மை விட 
சிறியவர்களை 
வணங்கும் முறை.

வணக்கம்
செலுத்தும்
முறை...

நம்
முன்னோர்களால்
ஏற்படுத்தப் பட்டு...

காலம்
காலமாக
நடைமுறையில்
உள்ள ஒன்று.

Give
Respect
Take
Respect

இது
மேற்கத்திய
கலாச்சாரம்.

நம்மை விட
சிறியவர்களோ
பெரியவர்களோ...

கை
குலுக்கியோ
அல்லது
கரம்
கூப்பியோ...

வணக்கம்
செலுத்தி
வாழ்ந்தால்...

பிணக்கின்றி
இணக்கமாக
இன்பமாக 
வாழலாம்.

வாங்க...

நடைமுறை
படுத்துவோம்.

நம்
வாழ்வில்
மகிழ்ச்சியை
காண்போம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..

பகிர்வு

Tuesday, 10 November 2020

இரண்டாம். கொரோனா அலை..வருமா..?

*இன்று (05.11.2020) வந்துள்ள 'தினமலர்' மதுரை பதிப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை*:
       
*இரண்டாம் கொரோனா அலை வருமா?*
- *டாக்டர் கு. கணேசன் இராஜபாளையம்*
 
கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்து வரும் சூழலைத் தொடர்ந்து, தமிழக அரசு பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயம்பேடு சந்தை ஆகியவற்றைத் திறக்க முடிவெடுத்துள்ள இந்த நேரத்தில் ‘இரண்டாம் கொரோனா அலை வீசுமோ’ எனும் அச்சம் பொதுமக்களிடம் பரவலாகி இருக்கிறது. என்ன காரணம்?

*தொற்று அலைகள் மூன்றுவிதம்*

ஒரு பெருந்தொற்றுப் பரவலில் 3 அலைகள் உண்டு. முதன்முதலாக ஒரு தொற்று தொடங்கி நாடு முழுவதுமோ, உலக நாடுகளிலோ அது பரவுவது முதல் அலை. கடந்த 7 மாதங்களாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று, முதல் அலையைச் சேர்ந்தது.

அடுத்து, அந்தத் தொற்றின் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து, தொற்றுப் பரவலும் குறைந்து வரும் நேரத்தில், மறுபடியும் அது வீரியம் பெற்று, முன்பைவிட அதிக அளவில் பரவுவதை இரண்டாம் அலை என்கிறோம். உலகில் 1918ம் ஆண்டில் 50 கோடி மக்களைப் பலி வாங்கிய ‘ஸ்பானிஸ் ஃபுளு’ மார்ச்சில் முதல் அலையாகவும் செப்டம்பரில் இரண்டாம் அலையாகவும் பரவியதை இங்கு நினைவு கூறலாம்.

அதே தொற்று நன்றாகக் கட்டுக்குள் வந்த பிறகு, மக்களின் வாழ்க்கை நிலைமைகள் முற்றிலுமாக மீண்ட பிறகு, சில காலம் கழித்து, அந்தத் தொற்றுக்குக் காரணமான கிருமி தன் உருவத்தில் சில மாறுதல்களை உண்டாக்கிக்கொண்டு, பருவ காலங்களின் துணையுடன் மறுபடியும் பரவ ஆரம்பிப்பதை மூன்றாம் அலை என்கிறோம். வருடா வருடம் மழைக்காலத்தில் பரவும் 'பருவகால ஃபுளு' இதற்கு உதாரணம்.

பொதுவாக, மூன்றாம் அலை பெருந்தொற்றாகப் பரவாது. அப்படிப் பரவுவதற்குள் தடுப்பூசி வந்துவிடும். ஆகவே, ஆபத்து மிகுந்த இரண்டாம் அலை வராமல் காப்பதுதான் முக்கியம்.

*யார் காரணம்?*

ஒரு பெருந்தொற்று இரண்டாம் அலையாக வீசுவதற்கு வழக்கமான தொற்று எச்சரிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்கத் தவறுவதுதான் முக்கியக் காரணம். உதாரணத்துக்கு, காலில் காயம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு மருந்துக் கட்டு போடுகிறோம். ஓரளவு ஆறிவரும்போது, இனி அது தானாகவே ஆறிவிடும் என்று தன்னிறைவு அடைந்து, சிகிச்சையை அலட்சியப்படுத்தி, மருந்தும் போடாமல், துணிக்கட்டும் கட்டாமல், அலைந்து கொண்டிருந்தால், அந்தப் புண்ணில் மறுபடியும் சீழ் கட்டிப் புரையேறிவிடும். அதுமாதிரி, கொரோனா தொற்றுப் பரவல் இப்போது குறைந்து விட்டது எனும் நினைப்பில் பண்டிகைக் காலம், பொருளாதார வீழ்ச்சி போன்ற நிர்பந்தங்களால் மக்களும் சரி, அரசும் சரி கொரோனாவுக்கான பாதுகாப்பு எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்துகின்றனர். இதனால், கொரோனாவுக்குக் கொண்டாட்டம் கூடி இரண்டாம் அலை வீசுவதற்குத் தயாராகிவிட்டது.

*வரவேற்பு கொடுக்கும் பண்டிகைகள்*

தற்போது அடுத்தடுத்து வரும் பண்டிகைகள் கொரோனா தொற்றுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதில் முன் வரிசையில் நிற்கின்றன. புத்தாடை இல்லாமல், பொட்டுத் தங்கம் வாங்காமல் பண்டிகையைக் கொண்டாட முடியுமா? இலவசம், தள்ளுபடி, சலுகை விலையை இழக்க முடியுமா? இந்த நினைப்பில், கடந்த 7 மாதங்களாக வீட்டில் அடைந்துகிடந்த மக்கள் இப்போது பொதுவெளியில் தாராளமாக நடமாடுகின்றனர். கடைகளில், மால்களில், சந்தைகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளி இல்லாமலும் அவர்கள் அலைவதைப் பார்க்கும்போது மக்கள் கொரோனாவை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பாதுகாப்பைப் புறக்கணித்து மக்கள் கூடுவதுதான்  இரண்டாம் கொரோனா அலை வீசுவதற்கும் காரணம் என்பதை எப்போது அவர்கள் புரியப்போகிறார்கள்?

ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரளத்திலும் விநாயக சதுர்த்திக்குப் பிறகு மும்பையிலும், தசராவுக்குப் பிறகு புதுடில்லியிலும், பூரி ஜகந்நாதர் ரத யாத்திரையைத் தொடர்ந்து ஒடிசாவிலும் கொரோனா இரண்டாம் அலையாக வீசியதால், அங்கெல்லாம் தொற்றுப் பரவலும் பாதிப்பும் அதிகரித்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மக்கள்தான் அதைக் கவனிக்கத் தயாரில்லை.

*ஆபத்து தரும் குளிர்காலம்*

இந்தியாவில் முக்கிய விழாக்களும் பண்டிகைகளும் குளிர்காலத்தில் வருவது இன்னோர் ஆபத்து. வழக்கத்தில் குளிர்காலத்தில் நிலவும் உலர் காற்று, வைரஸ் பரவலுக்குத் துணை செய்கிறது. தொற்றாளர்களின் திரவத் திவலைகள் மூலம் வெளிவரும் கரோனா கிருமிகள், அந்தத் திரவம் உலர்ந்த பின்னும் சில மணி நேரம் காற்றில் கலந்திருக்கும். தொற்றாளர் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டாலும் அவர் வெளிப்படுத்திய சுவாசத் துளிகள் நீண்ட நேரம் காற்றில் மிதந்துகொண்டிருக்கும். அப்போது எவராவது முகக்கவசம் அணியாமலும் தனி மனித இடைவெளி இல்லாமலும் அந்த இடத்துக்கு வருவாரென்றால் அவருக்கும் தொற்று பரவிவிடும்.
பொதுவாக, வெளியிடங்களைவிட காற்றோட்டம் குறைந்த இடங்களில் இம்மாதிரி கரோனா தொற்று பரவுவது அதிகம். குளிர்காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கிக்கிடக்கும் காலமும் நேரமும் அதிகம் என்பதால் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு 19 மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

இந்தியாவில் புதுடில்லி, பஞ்சாப் மாநிலங்களும் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, போலந்து போன்ற நாடுகளும் குளிர்காலத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதை மறைக்க முடியுமா?

*பள்ளிகள் திறப்பு*

தமிழகத்தில் 9ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை பள்ளிகள், கல்லூரிகள் தீபாவளிக்குப் பிறகு திறக்கப்பட உள்ளன. இது பேராபத்துக்கு அச்சாரம் என்பதை அரசு ஏனோ உணரவில்லை. பள்ளிகளில் மாணவர்கள் தனிமனித இடைவெளி காப்பதும் முகக்கவசம் அணிந்திருப்பதும் எல்லா நேரமும் சாத்தியமில்லை. அதிலும் பத்து நிமிட இடைவெளியில் கழிப்பறைக்குச் சென்றுவர வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது மாணவர்கள் நெருக்கியடித்துக் கழிப்பறைக்குச் செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. கொரோனா தொற்றாளர் அருகில் பத்து நிமிடங்கள் நின்றால் போதும் தொற்று பரவிவிடும். எனவே, பள்ளிகளில் மாணவர்களுக்குத் தொற்று பரவ கழிப்பறை நேரமே போதும்.

அது மட்டுமில்லாமல், தொற்றைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் வீட்டில் உள்ள பெற்றோருக்கும் மூத்தவர்களுக்கும் எளிதில் பரப்பிவிடுவார்கள். இதன் விளைவால் மீண்டும் ஒரு கொரோனா தொற்றுச் சங்கிலி உருவாகி, இரண்டாம் அலை வீசுவதற்கு வழி கிடைத்துவிடும்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, கொரோனா சூழல் குறைந்துவிட்டதாகக் கருதி பள்ளிகளைத் திறந்த இஸ்ரேல், பிரிட்டன், தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலையாக வீறுகொண்டு எழுந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இந்த எச்சரிக்கை தமிழகத்துக்கும் பொருந்தும். அரசு ஏனோ இதை அலட்சியப்படுத்துகிறது.

*திரையரங்குகள் திறப்பு*

50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுவும் கொரோனா இரண்டாம் அலைக்கு அடிக்கல் நாட்டுவதுபோல்தான். பாதி இருக்கைகளுடன் எந்தவொரு திரையரங்கமும் இயங்கப் போவதில்லை. திரையரங்குகளில் சன்னல்களை மூடாமல் இருக்க முடியாது. மூடிய அறைகளில்தான் தொற்றுப் பரவல் அதிகம். முறையாக முகக்கவசம் அணிந்துகொண்டு 3 மணி நேரம் திரையரங்கில் இருப்பது யாருக்கும் சாத்தியமில்லை. மால்களில் மின்தூக்கிகளில் வாடிக்கையாளர்களை அடைப்பதுபோல் திரையரங்குகளும் விதிமீறல்களுடன் இயங்கினால் கொரோனா பலருக்கும் பரவிவிடும்.

இப்படிப் பல வழிகளில் இரண்டாம் கொரோனா அலை வீசுவதற்கான சூழல்கள் பெருகி வருவதை மக்களும் அரசும் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி வரும்வரை முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளி காப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகிய மூன்றும்தான் நம்மைக் காக்கும் கவசங்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். *பள்ளிகளையும் திரையரங்குகளையும்* திறப்பது தொடர்பான முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் இரண்டாம் கொரோனா அலையைத் தடுக்க முடியும்.

*டாக்டர் கு. கணேசன்,*  
*மருத்துவ இதழியலாளர்,*
*ராஜபாளையம்.*

நன்றி.. தின மலர்
மக்கள் நலம் கருதி இது மீள்பதிவு

Sunday, 8 November 2020

புதிய பார்வை.. புதிய கோணம்...



கிரேக்க குரு
ஒருமுறை தன் 
மாணவர்களை
ஆற்றங்கரையில் 
நிற்க வைத்துவிட்டு...

" நாம் 
  அனைவரும்
  அந்த கரைக்கு
  செல்ல வேண்டும்...

  இந்த 
  ஆற்றில் 
  முதலைகள் 
  இருக்கின்றனவா 
  என்று பார்த்து 
  விட்டு வருகிறேன்...

  நான் திரும்ப
  வந்தவுடன்
  அனைவரும்
  நீந்தி செல்லலாம் "

என்று ஆற்றில் 
குதிக்க தயாரானார்.

இவர் 
சொல்வதை 
கேட்ட ஒரு மாணவர்
உடனே ஆற்றில்
குதித்து அந்த 
கரைக்கு நீந்தி 
சென்று திரும்ப
வந்து...

" இந்த
  ஆற்றில்
  முதலைகள் 
  ஏதும் இல்லை 
  நாம் ஆற்றில்
  நீந்தலாம் "

என்று குருவிடம்
கூறினார்.

இதை பார்த்து
கொண்டேயிருந்த 
குரு...

" நீ நீந்தி 
  போன போது 
  முதலைகள் கடித்து 
  குதறி இருந்தால் 
  என்ன ஆயிருக்கும் ?"

என்று 
பதட்டத்துடன்
கேட்டார். 

அதற்கு அந்த 
மாணவன்... 

" என் உயிர்
  போனால் 
  பரவாயில்லை...

  என்னை போல்
  ஆயிரம் பேரை 
  நீங்கள் 
  உருவாக்குவீர்கள்...

  ஆனால்...

  உங்களை 
  போன்ற குரு 
  எங்களுக்கு 
  கிடைக்க
  மாட்டார்கள்...

  எனவே எங்கள் 
  உயிர்களை
  காட்டிலும்
  உங்கள் உயிர் 
  எங்களுக்கு
  முக்கியம் "

என்று 
கூறினார்.

இதைக் 
கேட்ட குரு 
தம் சீடர்களை
நினைத்து 
நெகிழ்ந்து 
போனார்.

அந்த
அற்புதமான குரு 
அரிஸ்டாட்டில்.

அந்த
பெருமைக்குரிய 
சீடர் அலெக்சாண்டர்.

வரலாறு
தெரிவிக்கும்
உண்மை இது.

ஆசிரியர்
மாணவர்
உறவென்பது...

பாட 
திட்டத்தையும்
தாண்டி...

அன்பு மயமானது !
அக்கறை மிக்கது !!
புனிதமானது !!!

இந்த 
உறவில்
வெல்பவர்கள்
காலம் கடந்தும்...

பரிமளிக்கிறார்கள்
பாராட்டப்படுகிறார்கள்
போற்றப்படுகிறார்கள்

இதை
உணர்ந்து
புரிந்து ஆசிரியர்
சமுதாயம் நடக்கும்
எனில்...

அதிசய உலகம்
அற்புத சமூகம்
மலர்ந்தே தீரும்.

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Sunday, 10 May 2020

வகுப்பறை தொழில்நுட்ப ம்..

வகுப்பறை தொழில்நுட்பம் ( ஆசிரியர்களுக்கு உதவும் ஆண்ட்ராய்டு செயலி ) நம்மில் பலர் தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் சிரமம் படுவதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம்...ஆங்கிலத் தட்டச்சு செய்வது போல் தமிழில் தட்டச்சு செய்ய நம்மால் இயலவில்லை இது உண்மை . இந்த குறையை போக்க நாம் ஸ்பீக் டு தமிழ் டெக்ஸ் ( Speak to Tamil TeX ) என்ற ஆண்ட்ராய்டு செயலி பற்றி இந்த இதழில் பார்க்க உள்ளோம். இது ஒரு ஆண்ட்ராய்டு செயலி எனவே முதலில் நாம் இதனை ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து நம் கைபேசியில் நிறுவிக்கொள்ள (Install) வேண்டும். மிக சிறிய அளவு கொண்டது இந்த செயலி என்பது சிறப்பு. இன்ஸ்டால்( Installed ) செய்த பின் திரையில் மைக் போன்ற icon ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணத்தில் தோன்றும் அந்த பட்டனை அமுக்கி நாம் தட்டச்சு செய்ய நினைக்கும் தமிழ் வரிகளை வரிசையாக கோர்வையாக பேசுங்கள் . நீங்கள் பேசும்போதே தமிழ் தட்டச்சு நடைபெறுவதை நீங்கள் திரையில் பார்க்க இயலும் . செயலியை ஆன் செய்து பேசும்போது ஆங்கிலம் கலக்காமல் தெளிவாக மற்றும் நிதானமாக பேசினால் தமிழ் தட்டச்சில் எழுத்து பிழை மற்றும் வார்தை பிழை இன்றி நம் கருத்துக்களை டெக்ஸ்ட் ( எழுத்து வடிவம்) ஆக எளிதாக மாற்றிக்கொள்ள இயலும் . பேசி முடித்த பின் தமிழ் வரி வடிவத்தை உடன் சேமித்து அதாவது சேவ் (save) செய்து கட் (cut ) அண்ட் பேஸ்ட் (paste ) முறையில் வாட்ஸ் ஆப் , முகநூல் , உள் பெட்டி, ட்விட்டர் போன்றவற்றில் இவைகளை பகிர்ந்து ((Share) கொள்ளலாம் . பெரிய கட்டுரைகள், கவிதைகள் , கடிதங்கள் எழுதவும் சேமித்து மற்றும் பிரிண்ட் எடுத்துக வைத்து கொண்டு பயன்படுத்தவும் இந்த செயலி மிகவும் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். . ஆசிரியர்களின் பணிச்சுமையை கண்டிப்பாக குறைக்கும் என்பது உண்மை . இந்த செயலில் உள்ள முக்கியமான ஒரு குறை என்று சொன்னால் ஆஃப்லைனில் (off line ) இயக்க இயலாது. இந்த செயலியை ஆன்லைஇல் மட்டும்மே இயக்க இயலும் . மீண்டும் அடுத்த இதழில் ஆசிரியர்களுக்கு பயன்தரும் ஒரு அருமையான ஆண்ட்ராய்டு செயலைப் பற்றி பார்ப்போம் .... ஆக்கம். கனவு ஆசிரியர் ஆ.சிவராமகிருஷ்ணன். பட்டதாரி ஆசிரியர்களாக ( கணிதம் ) சேலம் ஊரகம். சேலம்.

Saturday, 21 March 2020

விண்டோஸ் ...ஆப்ஸ்..

..விண்டோஸ் லேப்டாப் அல்லது பிசி வைத்திருக்கிறீர்களா? இந்த ஆப்களையெல்லாம் முயற்சி செய்யலாமே ஃப்ரெண்ட்ஸ்!

இன்று என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டாலும், இன்னும் கணினி மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் ஓஎஸ் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான, அனைவருக்கும் தேவைப்படும் சில ஆப்கள் மற்றும் மென்பொருள்கள் தவிர பெரிதாக வேறு எதையும் நாம் பதிவிறக்குவதில்லை. ஆனால் அப்படி அத்தியாவசிய தேவையில்லையென்றாலும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய சில ஆப்களை பற்றிப் பார்ப்போம்.

Ueli

விண்டோஸில் இருக்கும் சர்ச் ஆப்சன் நன்றாக இருந்தாலும் சில விஷயங்களை அதில் எளிதாகத் தேடமுடியாது. இதை இன்ஸ்டால் செய்து alt+space-ஐ சேர்த்து அழுத்துவதன் மூலமே ஆப், சிறிய கணக்குகள், புரியாத வார்த்தைகள் என வேண்டியதைத் தேடமுடியும். இது மேக் ஓஎஸ்சில் இருக்கும் சர்ச் வசதியைப் போல செயல்படும். மேலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப இதன் லுக் மற்றும் வசதிகளை எளிதாக மாற்றியமைக்கமுடியும். உங்கள் கம்ப்யூட்டரில் தேடுவதை எளிதாக்க விரும்பினால் இதைப் பதிவிறக்கலாம்.

ShareX
விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எளிதென்றாலும், இந்த ShareX கொடுக்கும் வசதிகளில் பாதியை கூட அது கொடுக்காது. பல வகையான முறைகளில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க உதவும் இது எந்த ஃபார்மட்டில் வேண்டுமோ அதில் போட்டோவை எக்ஸ்போர்ட் செய்யமுடியும். மேலும் இதில் ஸ்கிரீனில் நடப்பதை விடியோவாகவும் ரெகார்ட் செய்யமுடியும். எடுத்தவுடன் நேரடியாக கிளவுட்டில் பதிவேற்றுவது எனப் பல மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இது. எனவே அடிக்கடி ஸ்கிரீன்ஷாட் மற்றும் ஸ்கிரீன்வீடியோ எடுக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
PeaZip

Zip மற்றும் Rar ஃபைல்களை எக்ஸ்ட்ராக்ட் செய்வதற்குப் பெரும்பாலானோர் Winrar ஆப்பைதான் பயன்படுத்துவோம். ஆனால் அது அடிக்கடி பிளான் எக்ஸ்பைரி ஆகிவிட்டது என பாப்-அப்களை அனுப்பும். எக்ஸ்ட்ராக்ட் செய்யவும் அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு மாற்றாக இலவச PeaZip ஆப்பை பயன்படுத்தலாம். இந்த ஆப் மூலம் எக்ஸ்ட்ராக்ட் மட்டுமின்றி கம்ப்ரெஸ் செய்யவும் முடியும். அதுவும் பல ஃபார்மட்களில் செய்யமுடியும். பாஸ்வர்ட் கொண்டு கம்ப்ரெஸ் செய்வதென 'Compression' மற்றும் 'Extraction' தொடர்பான அனைத்துக்கும் இந்த ஒரு ஆப்பே போதுமென்பது சிறப்பு.
Convertor bot

பெயருக்கு ஏற்றது போலவே எந்த ஒரு டாகுமென்ட்டையும் வேண்டிய ஃபார்மட்டுக்கு மாற்றிகொடுக்கும் இந்த convertor bot. அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது. இதைப்போன்ற ஆப்கள் பெரும்பாலும் இணையத்திலேயே இருப்பதால் அங்கு உங்கள் டாகுமென்ட்டுகளை பதிவேற்றுவது எந்த அளவு பாதுகாப்பானது என்பது நமக்குத் தெரியாது. எனவே இதைப்போன்ற ஆஃப்லைன் ஆப்பை இதற்குப் பயன்படுத்துவது நல்லது.
Wiztree

நீங்கள் ஒரு லேப்டாப் பயன்பாட்டாளர் என்று வைத்துக்கொள்வோம். முழுவதும் SSD வகை ஸ்டோரேஜ் கொண்ட உங்கள் லேப்டாப்பில் 128 GB மட்டும்தான் ஸ்டோர் செய்யமுடியும். இதனால் அடிக்கடி உங்கள் லேப்டாப்பில் இடமில்லாமல் போகும். எது அதிக இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறதென தெரியாமலேயே பார்க்கும் ஃபைல்களை எல்லாம் டெலீட் செய்வோம். இப்படியான சூழலில் எது அதிக இடத்தைப் பிடிக்கிறது எனக் கண்டறிய மிகவும் உதவிகரமாக இருக்கும் Wiztree. இது ஃபைல்களின் சைஸை கொண்டு சார்ட் ஒன்றை ரெடி செய்யும். இதன்மூலம் அதிக இடம் பிடிக்கும் ஃபைல்களை எளிதாக டெலீட் செய்யமுடியும்.

நன்றி நட்புகளே....
மாணவர் நலம் கருதி...

வெற்றி படிகட்டு....

*இதுவும் கடந்து போகும்* 🌼
................................................

🌼ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார்.

🌼ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.
தொடர்ந்து புத்தரை நோக்கி,
“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்.

🌼ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது.

🌼எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

🌼அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்.

🌼தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்.

🌼நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள்.

🌼உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்”
என்றது அக்குரல்.

🌼மௌனமாக சிரித்த புத்தர்,

“இதுவும் கடந்து போகும்”

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

🌼அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்ள் அசைபோட்டது.

🌼நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.

🌼“இதுவும் கடந்து போகும்” 🌼என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

🌼இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

🌼“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.

🌼“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.

🌼அடுத்து இருந்த அழகான பெண், “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.

🌼கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது, “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..

🌼ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது

🌼 “இதுவும் கடந்து போகும்”🌼

என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சோர்ந்துவிட மாட்டீர்கள்.

🌼நல்ல மனிதர்களும்,நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

🌼அவர்கள் இருக்கும்போது அவர்களை கௌரவிப்பீர்கள்..
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்.

🌼எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.

🌼“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள்.

🌼கண்டிப்பாக மாறிவிடும். தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள் ,

🌼அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.🌼

🌼 *வெற்றி நிச்சயம்…* 🌼
👍👍👍👍👍👍

Tuesday, 18 February 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

உயர்ந்த
மனிதர்களின்
ஒப்பற்ற சாரம்
'நேர்மையே'.

'உண்மை'
எனப்படுவது
வேறு...

'நேர்மை'
எனப்படுவது
வேறு...

'உண்மை'
பேசுவது
முதல் படி.

'உண்மை'யை
கடை பிடிப்பது
இரண்டாம் படி.

'உண்மை'யாய்
நடப்பது
மூன்றாம் படி.

'உண்மை'யாகவே
இருப்பது
நான்காம் படி.

இவை
எல்லாவற்றையும்
தாண்டி...

'நேர்மை'யாய்
வாழ்வது
'உண்மை'யின்
உச்ச படி.

நல்ல
பண்பு,
உயர்ந்த
எண்ணம்,
மேன்மைமிகு
நடத்தை,
மாசில்லா
ஒழுக்கம்,
தூய்மையான
குணம்...

இவைகள்
'நேர்மை'யின்
வடிவங்கள்.

'நேர்மை'
ஒரு மனிதனின்...

உள்ளத்தை
தூய்மை
படுத்துகிறது.

வாக்கினிலும்
செயலிலும்
இனிமை
சேர்க்கின்றது.

பதட்டத்தையும்
கோபத்தையும்
குறைக்கிறது.

மன
அமைதியையும்,
ஞானத்தையும்
தருகின்றது.

குறைகளற்ற,
பரிபூரணமான
மகிழ்ச்சியை,
எந்நாளும்
அளிக்கின்றது.

இதன்
காரணமாக...

'நேர்மை'
ஒருவரை...

குன்றில்மேல்
இட்ட விளக்காய்,
'ஒளிர'
வைக்கின்றது.

ஒரு மரம்
தன்
'இலைகளை'
காட்டிலும்...

தன்
'கனிகளால்'
மதிப்புறுவதை
போல...

ஒரு
மனிதன்...

தன்
படிப்பில்,
பதவியில்,
செல்வத்தில்
காட்டிலும்...

தன்
'நேர்மை'யில்
மிளிர்கிறான்
என்பதே
உண்மை...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.