முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Sunday, 8 November 2020

புதிய பார்வை.. புதிய கோணம்...



கிரேக்க குரு
ஒருமுறை தன் 
மாணவர்களை
ஆற்றங்கரையில் 
நிற்க வைத்துவிட்டு...

" நாம் 
  அனைவரும்
  அந்த கரைக்கு
  செல்ல வேண்டும்...

  இந்த 
  ஆற்றில் 
  முதலைகள் 
  இருக்கின்றனவா 
  என்று பார்த்து 
  விட்டு வருகிறேன்...

  நான் திரும்ப
  வந்தவுடன்
  அனைவரும்
  நீந்தி செல்லலாம் "

என்று ஆற்றில் 
குதிக்க தயாரானார்.

இவர் 
சொல்வதை 
கேட்ட ஒரு மாணவர்
உடனே ஆற்றில்
குதித்து அந்த 
கரைக்கு நீந்தி 
சென்று திரும்ப
வந்து...

" இந்த
  ஆற்றில்
  முதலைகள் 
  ஏதும் இல்லை 
  நாம் ஆற்றில்
  நீந்தலாம் "

என்று குருவிடம்
கூறினார்.

இதை பார்த்து
கொண்டேயிருந்த 
குரு...

" நீ நீந்தி 
  போன போது 
  முதலைகள் கடித்து 
  குதறி இருந்தால் 
  என்ன ஆயிருக்கும் ?"

என்று 
பதட்டத்துடன்
கேட்டார். 

அதற்கு அந்த 
மாணவன்... 

" என் உயிர்
  போனால் 
  பரவாயில்லை...

  என்னை போல்
  ஆயிரம் பேரை 
  நீங்கள் 
  உருவாக்குவீர்கள்...

  ஆனால்...

  உங்களை 
  போன்ற குரு 
  எங்களுக்கு 
  கிடைக்க
  மாட்டார்கள்...

  எனவே எங்கள் 
  உயிர்களை
  காட்டிலும்
  உங்கள் உயிர் 
  எங்களுக்கு
  முக்கியம் "

என்று 
கூறினார்.

இதைக் 
கேட்ட குரு 
தம் சீடர்களை
நினைத்து 
நெகிழ்ந்து 
போனார்.

அந்த
அற்புதமான குரு 
அரிஸ்டாட்டில்.

அந்த
பெருமைக்குரிய 
சீடர் அலெக்சாண்டர்.

வரலாறு
தெரிவிக்கும்
உண்மை இது.

ஆசிரியர்
மாணவர்
உறவென்பது...

பாட 
திட்டத்தையும்
தாண்டி...

அன்பு மயமானது !
அக்கறை மிக்கது !!
புனிதமானது !!!

இந்த 
உறவில்
வெல்பவர்கள்
காலம் கடந்தும்...

பரிமளிக்கிறார்கள்
பாராட்டப்படுகிறார்கள்
போற்றப்படுகிறார்கள்

இதை
உணர்ந்து
புரிந்து ஆசிரியர்
சமுதாயம் நடக்கும்
எனில்...

அதிசய உலகம்
அற்புத சமூகம்
மலர்ந்தே தீரும்.

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments:

Post a Comment