..விண்டோஸ் லேப்டாப் அல்லது பிசி வைத்திருக்கிறீர்களா? இந்த ஆப்களையெல்லாம் முயற்சி செய்யலாமே ஃப்ரெண்ட்ஸ்!
இன்று என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டாலும், இன்னும் கணினி மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் ஓஎஸ் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான, அனைவருக்கும் தேவைப்படும் சில ஆப்கள் மற்றும் மென்பொருள்கள் தவிர பெரிதாக வேறு எதையும் நாம் பதிவிறக்குவதில்லை. ஆனால் அப்படி அத்தியாவசிய தேவையில்லையென்றாலும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய சில ஆப்களை பற்றிப் பார்ப்போம்.
Ueli
விண்டோஸில் இருக்கும் சர்ச் ஆப்சன் நன்றாக இருந்தாலும் சில விஷயங்களை அதில் எளிதாகத் தேடமுடியாது. இதை இன்ஸ்டால் செய்து alt+space-ஐ சேர்த்து அழுத்துவதன் மூலமே ஆப், சிறிய கணக்குகள், புரியாத வார்த்தைகள் என வேண்டியதைத் தேடமுடியும். இது மேக் ஓஎஸ்சில் இருக்கும் சர்ச் வசதியைப் போல செயல்படும். மேலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப இதன் லுக் மற்றும் வசதிகளை எளிதாக மாற்றியமைக்கமுடியும். உங்கள் கம்ப்யூட்டரில் தேடுவதை எளிதாக்க விரும்பினால் இதைப் பதிவிறக்கலாம்.
ShareX
விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எளிதென்றாலும், இந்த ShareX கொடுக்கும் வசதிகளில் பாதியை கூட அது கொடுக்காது. பல வகையான முறைகளில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க உதவும் இது எந்த ஃபார்மட்டில் வேண்டுமோ அதில் போட்டோவை எக்ஸ்போர்ட் செய்யமுடியும். மேலும் இதில் ஸ்கிரீனில் நடப்பதை விடியோவாகவும் ரெகார்ட் செய்யமுடியும். எடுத்தவுடன் நேரடியாக கிளவுட்டில் பதிவேற்றுவது எனப் பல மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இது. எனவே அடிக்கடி ஸ்கிரீன்ஷாட் மற்றும் ஸ்கிரீன்வீடியோ எடுக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
PeaZip
Zip மற்றும் Rar ஃபைல்களை எக்ஸ்ட்ராக்ட் செய்வதற்குப் பெரும்பாலானோர் Winrar ஆப்பைதான் பயன்படுத்துவோம். ஆனால் அது அடிக்கடி பிளான் எக்ஸ்பைரி ஆகிவிட்டது என பாப்-அப்களை அனுப்பும். எக்ஸ்ட்ராக்ட் செய்யவும் அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு மாற்றாக இலவச PeaZip ஆப்பை பயன்படுத்தலாம். இந்த ஆப் மூலம் எக்ஸ்ட்ராக்ட் மட்டுமின்றி கம்ப்ரெஸ் செய்யவும் முடியும். அதுவும் பல ஃபார்மட்களில் செய்யமுடியும். பாஸ்வர்ட் கொண்டு கம்ப்ரெஸ் செய்வதென 'Compression' மற்றும் 'Extraction' தொடர்பான அனைத்துக்கும் இந்த ஒரு ஆப்பே போதுமென்பது சிறப்பு.
Convertor bot
பெயருக்கு ஏற்றது போலவே எந்த ஒரு டாகுமென்ட்டையும் வேண்டிய ஃபார்மட்டுக்கு மாற்றிகொடுக்கும் இந்த convertor bot. அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது. இதைப்போன்ற ஆப்கள் பெரும்பாலும் இணையத்திலேயே இருப்பதால் அங்கு உங்கள் டாகுமென்ட்டுகளை பதிவேற்றுவது எந்த அளவு பாதுகாப்பானது என்பது நமக்குத் தெரியாது. எனவே இதைப்போன்ற ஆஃப்லைன் ஆப்பை இதற்குப் பயன்படுத்துவது நல்லது.
Wiztree
நீங்கள் ஒரு லேப்டாப் பயன்பாட்டாளர் என்று வைத்துக்கொள்வோம். முழுவதும் SSD வகை ஸ்டோரேஜ் கொண்ட உங்கள் லேப்டாப்பில் 128 GB மட்டும்தான் ஸ்டோர் செய்யமுடியும். இதனால் அடிக்கடி உங்கள் லேப்டாப்பில் இடமில்லாமல் போகும். எது அதிக இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறதென தெரியாமலேயே பார்க்கும் ஃபைல்களை எல்லாம் டெலீட் செய்வோம். இப்படியான சூழலில் எது அதிக இடத்தைப் பிடிக்கிறது எனக் கண்டறிய மிகவும் உதவிகரமாக இருக்கும் Wiztree. இது ஃபைல்களின் சைஸை கொண்டு சார்ட் ஒன்றை ரெடி செய்யும். இதன்மூலம் அதிக இடம் பிடிக்கும் ஃபைல்களை எளிதாக டெலீட் செய்யமுடியும்.
நன்றி நட்புகளே....
மாணவர் நலம் கருதி...
விளக்கம் நன்று... நன்றி...
ReplyDeleteSuperb sir
ReplyDelete