முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Tuesday, 7 February 2017

ஆமை - கவிதை

🌞ஆமை🌞

ஆமை வேகம்
நமக்கு
ஒரு நல்ல
பாடம்
வெற்றி கனி
பறிக்க
பின் பற்ற
வேண்டிய
நபர்
நம்ம ஆமை....

இயலாமையை
கூட
இங்கு
பொறாமை
பட வைக்கும்
நம்மவர்
நம் ஆமை...

போற்றுவார்
போற்றலும்
தூற்றுவார்
தூற்றினாலும்
பொறுமையின்
இலக்கின்
மைத்தர்
நம் ஆமை...

முயல் ஆமை
கதை உலகறிந்த்து
அதன் பாடம்
வேகம் மட்டும்
போதாது
விவேகம் இருந்தால்
வெற்றி
நம் வசம்படும்
என போதித்த
போதிதர்மர்
நம்மவர்
ஆமை...

ஆனால் அதன்
இனம் அழித்து
வருகிறது
மனதுக்கு
சற்று
பாரம் தருகிறது...
மனிதர் நாம்
காப்போம்
ஆமைகளை
அழிவிலிருந்து.....

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿



   

2 comments: