#_பக்தி:
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி
தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக்
கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச்
சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே
வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து
அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன்
கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று
தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள்
ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த
சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம்
செய்து வழிபட்டான்ஒருநாள் திடீரெனப் பெய்த
மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும்
கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய
சாம்பல் இல்லையே என வருந்திய அவனும்
விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது
மனைவியிடம் ”நான் இந்த தீயில் விழுகிறேன். என்
உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான்.
ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால்
இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில்
குதிக்கின்றேன்” என்று கூறிக்கொண்டே தீயில்
வீழ்ந்தாள். இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன்
பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை
உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார்.
இதைக் கேட்ட அரசனும் தங்கத்தால் ஆன
சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்
வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த
எனக்கு காட்சிதராத இறைவன், சுடுகாட்டுச்
சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு
மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும் ’பக்தி’
என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே
மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.
முதற்கண்ணாக.,
இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...
Tuesday, 28 February 2017
அன்பின் மகிமை....
Monday, 27 February 2017
முயல்- சிறுகதை
ஒரு நிமிடக்கதைகள்;
உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன். நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை.
எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த அவன் அரசனிடம் சென்றான். "அரசே என் தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றான். சிரித்த அரசன் "ஒரு முயலைப் பிடிக்க உன்னால் முடியவில்லையா?" என்று கேட்டான்.
"அரசே! அந்த முயலுக்கு மாய மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். நான் அதைப் பார்த்துக் கல்லையோ கட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவது இல்லை" என்றான் அவன்.
"நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்கு வருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என் வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலைப் பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன்" என்றான் அரசன்.
மகிழ்ச்சியுடன் தன் தோட்டத்திற்கு வந்தான் அவன் அரசனுக்கும் அவன் வீரர்கட்கும் சிறப்பான விருந்திற்கு ஏற்பாடு செய்தான். மறுநாள் படை வீரர்கள், வேட்டைக்காரர்கள், நாய்கள் சூழ அரசன் அங்கு வந்தான்.
எல்லோரையும் வரவேற்ற உழவன் அவர்களுக்குச் சிறப்பாக விருந்து வைத்தான். விருந்து முடிந்தது. மகிழ்ச்சி அடைந்த அரசன் "இன்னும் சிறிது நேரத்தில் அந்த முயல் என்ன கதி ஆகிறது பார்" என்று வேட்டையாடப் புறப்பட்டான்.
வேட்டைக்காரர்கள் கொம்புகளை ஊதினார்கள். வேட்டை நாய்கள் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டே தோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்த முயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்த வேலியை நோக்கி ஓடியது.
அதைப் பார்த்த அரசன், "அந்த முயலைத் தப்ப விடாதீர்கள், பிடியுங்கள்" என்று கத்தியபடி வேலிப் பக்கம் ஓடினான். வேட்டைக்காரர்களும் வீரர்களும் அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள்.
தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் ஓடியது. அவர்கள் அனைவரும் அதைத் துரத்தினார்கள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக் கவ்விப்பிடித்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அந்த முயலை உழவரிடம் காட்டினான் அரசன். இவர்களின் முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம் முற்றிலும் நாசமாகி விட்டதை அறிந்து வருந்தினான் உழவன்.
ஒரு முயல் என்ன ஆயிரம் முயல்கள் பல நாட்கள் வந்திருந்தாலும் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தி இருக்க முடியாதே. என் முட்டாள்தனத்தால் பேரழிவைத் தேடிக் கொண்டேன்" என்று வந்திருந்தான் அவன்.
நீதி :- சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய முடிவு எடுக்க கூடாது..
Thursday, 23 February 2017
புரிதல்...புரிந்துகொள்ளல்....
_அவளும் நானும்_
ஒரு பேரங்காடி வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இவ்விளைஞனை அணுகி," தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.
"ஒன்னுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடிஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப்பேத்திகிட்டு". முதியவர் சிறு புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.
இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன். என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.
அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...
விழியோரம் நீர் தேங்க, அதான் தம்பி, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.
சரி தம்பி, நான் வரேன் என்று புறப்பட்ட பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன். பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்.
ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?
வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா? இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா? பதில் 100 க்கு 90 சதவீதம், இல்லைதான். பொண்டாட்டி சமைத்து போடுறதை, கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை, அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு மனைவியும் சொல்றதில்லை.
இதெல்லாம் சொல்லணும். அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.
நல்ல பதிவு...
விழியோரம் நீர்த் துளி...
Tuesday, 21 February 2017
உங்கள் வாழ்வு செழிக்க...
*'உங்கள் வாழ்வு செழிக்கச் சில அறிவுரைகள்'*
தொகுத்துத் தருபவர்:
Dr. Gouse MD (Acu) அவர்கள்.
🌹❤🌺❤🌷❤🌹❤🌺
!!அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!
1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.
2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.
5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.
6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .
8. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
9. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.
10. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.
11. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)
12. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.
13. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
14. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
15. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.
16. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.
17. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
18. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.
19. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.
20. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
21. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
22. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.
23. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.
24. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.
25. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.
26. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
30. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!
மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள்..மேலும் அரோக்கியம் பற்றிய விளக்கங்களுக்கு Whatsup மூலம் இனையுங்கள்.
Dr. Gouse MD (Acu).,
Monday, 20 February 2017
உலகத்தாய்மொழிதினம்....
தாய்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!
மொழியின்றி நாமில்லை. நாம் நினைக்கும் எல்லா விஷயங்களையும் பேச்சு, எழுத்து, சைகை, பாடல், கதை என்று பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகிறோம். ஒருவர் மற்றொருவருடன் கலந்துரையாடுகிறோம், விஷயங்களைப் புரிந்துகொள்கிறோம். இவை அனைத்துக்கும் அடிப்படை மொழி. மொழி இருப்பதால்தான் நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்த முடிகிறது. மொழியில்லாமல் எந்த வேலையும் நடக்காது.
ஒவ்வொரு நாடு, மாநிலம், பகுதிக்கும் பல்வேறு மொழிகள் இருக்கின்றன. இப்படி மொழிகள் வேறுபட்டிருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள பிரத்யேகமான நிலப்பகுதி, தட்பவெப்பம், சுற்றுச்சூழல் போன்றவை. மற்றொன்று அங்கு வாழும் மக்களின் பண்பாடு. இவை இரண்டும்தான் ஒவ்வொரு மொழிக்கும் அடித்தளம்.

தாய்மொழியின் தனித்தன்மை
ஃபிப்ரவரி 21-ம் தேதியை உலகத் தாய்மொழி நாளாக யுனெஸ்கோ கொண்டாடிவருகிறது. நம் நாட்டிலிருந்து நோபல் பரிசு பெற்ற ஒரே இலக்கியப் படைப்பு ‘கீதாஞ்சலி’. இந்தக் கவிதைத் தொகுப்பை ரவீந்திரநாத் தாகூர் முதலில் தன்னுடைய தாய்மொழியான வங்க மொழியில்தான் எழுதினார். அவரே பின்னர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதற்கே 1913-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியா என்பது ஏராளமான மொழிகள் நிறைந்த நாடு. முதன்மை மொழிகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துணை மொழிகள், வட்டார வழக்குகள் நம் நாட்டில் உள்ளன.
மாநிலங்களின் பெயரை வைத்தே நம் நாட்டு மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் மொழியைப் பெருமளவுக்குக் கண்டறிந்துவிடலாம். காஷ்மீரில் காஷ்மீரி, வங்கத்தில் வங்காளம், குஜராத்தில் குஜராத்தி, மகாராஷ்டிரத்தில் மராத்தி, அஸாமில் அஸாமியா, ஒடிசாவில் ஒடியா
[இந்திய மொழிகள்
நம் நாட்டில் நான்கு மிகப் பெரிய மொழிக் குடும்பங்கள் இருக்கின்றன:
இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம்
திராவிட மொழிக் குடும்பம்
ஆஸ்த்ரோ – ஆசிய மொழிக் குடும்பம்
திபெத்தோ – பர்மன் மொழிக் குடும்பம்
இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது சமஸ்கிருதம் (வடமொழி). காஷ்மீரி, டோக்ரி, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி, மைதிலி (பிகார்), வங்கம், ஒடியா, அஸாமிய மொழி உள்ளிட்டவை இந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
திராவிட மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்டவை. தென்னிந்திய மொழிகளில் பெருமளவு தமிழ், வடமொழி ஆதாரச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
திபெத்தோ-பர்மன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படுகின்றன. இவற்றில் மக்கள்தொகை அளவில் மணிப்பூரி முக்கியமானது.
மத்திய இந்தியாவில் பேசப்படும் காரியா, முண்டாரி போன்ற முண்டா மொழிகள் ஆஸ்த்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால், இவை பரவலாகப் பேசப்படவில்லை.
நூற்றுக்கணக்கான மொழிகள்
நமது அரசமைப்புச் சட்டத்தின் பட்டியலில் 22 முதன்மை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளுடன் ஆங்கிலம், ராஜஸ்தானி மொழிகளையும் சாகித்ய அகாடமி கூடுதலாக அங்கீகரித்துள்ளது. இந்த 24 மொழிகளில் எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கவுரவித்துவருகிறது.
சிந்தி மொழி பேசும் மக்கள் சிந்த் என்ற பண்டைய சிந்து பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது. ஆனாலும் இந்த மொழியைப் பேசுபவர்கள் இப்போதும் இந்தியாவில் இருப்பதால், அரசியல் சாசனம் இம்மொழியை அங்கீகரித்துள்ளது.
உருது பேசும் மக்களும் நம் நாட்டில் உண்டு. இவர்கள் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் மட்டுமல்லசிந்தி மொழி பேசும் மக்கள் சிந்த் என்ற பண்டைய சிந்து பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது. ஆனாலும் இந்த மொழியைப் பேசுபவர்கள் இப்போதும் இந்தியாவில் இருப்பதால், அரசியல் சாசனம் இம்மொழியை அங்கீகரித்துள்ளது.
உருது பேசும் மக்களும் நம் நாட்டில் உண்டு. இவர்கள் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் மட்டுமல்லாமல் பரவலாக இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் இம்மொழியைப் பேசுபவர்கள் அதிகம். அதேபோல ஆங்கில மொழி குறிப்பிட்ட எந்த மாநிலத்தையும் சேர்ந்ததில்லை என்றாலும், அரசின் தொடர்பு மொழியாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் வெளி மாநிலத்தவர் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய மொழியாகவும் உள்ளது.
இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள், துணை மொழிகள் பேசப்படுகின்றன. உலகில் நிலநடுக்கோட்டுக்குக் கீழே உள்ள பகுதிகளில்தான் மொழிகள் செழிப்பாக உள்ளன. இதற்குக் காரணம் இப்பகுதிகளில் வாழும் பல்வேறுபட்ட மக்களும் பல்வேறுபட்ட சுற்றுச்சூழலும்தான்.
நன்றி: தமிழ் இந்து
பிப்ரவரி-21 உலகத்தாய்மொழிதினம்
Tuesday, 14 February 2017
யான் பெற்ற இன்பம்....
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.
தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.
மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன.
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்.
"ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்.
குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது.
அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது.
அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும்.
அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அவன் யோசித்தான்.
தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.
ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.
தண்ணீர் வர ஆரம்பித்தது.
தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்.
எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.
இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை.
நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
இனிய மாலை வணக்கம்🙏🙏💐💐💐