தன்னுடைய
லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்.எல். மொபைல் போன்களின்
அறிமுகத்துடன், வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டது மைக்ரோசாப்ட்
நிறுவனம். முதன் முதலாக மடித்து வைத்து எடுத்துச் சென்று, பின் விரித்து
வைத்து செயல்படுத்தக் கூடிய கீ போர்ட் ஒன்றை, அண்மையில் பார்சிலோனாவில்
நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்ட்,
ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம். இது விண்டோஸ்
10 சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுடனும் இயங்கும். இது ஒரு
வயர்லெஸ் கீ போர்ட். புளுடூத் இணைப்பில் இயங்கும். மொபைல் போனில் இயங்கும்
விண்டோஸ் 10 இயக்கத்திலும் இதனை இயக்கலாம்.
இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் அதன் விலை குறித்தும் மைக்ரோசாப்ட் இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த
ஆண்டு, விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்தும் அனைவருக்கும், விண்டோஸ் 10
இலவசமாக அப்டேட் செய்திட வழங்கப்படும் என அறிவித்தது. விண்டோஸ் 10
சிஸ்டத்தின் சில அம்சங்கள், அது பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் அமைப்பினைப்
பொறுத்து வேறுபடும்.
ஏறத்தாழ
20 லட்சம் பேர் விண்டோஸ் இன்ஸைடர் புரோகிராமில் பதிந்து, விண்டோஸ் 10
சோதனைத் தொகுப்பினை சோதித்து வருகின்றனர். இவர்கள், ஏறத்தாழ 9 லட்சம்
பதிவுகளை பின்னூட்டமாக அளித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் பரிசீலிக்கப்பட்டு
முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த புரோகிராமில் பதிந்தவர்களுக்கு,
விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். கார்டனா டூல்,
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படும். இந்த அறிவிப்புகளை
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் துணைத் தலைவர் வெளியிட்டார்.
மொபைல்
போனுக்கான விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பு அண்மையில்
வெளியிடப்பட்டது. இதுதான் இந்த முறையில் முதலாவதாக வெளியிடப்பட்ட தொகுப்பு
என்றும், இது இன்னும் உருவாக்க வளர்ச்சியில் உள்ளது என்றும்
அறிவிக்கப்பட்டது.
நன்றி
No comments:
Post a Comment