முதற்கண்ணாக.,
இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...
Sunday, 29 March 2015
Thursday, 26 March 2015
மைக்ரோசாப்ட்டின் புத்தம் புது Foldable கீ போர்ட்..
தன்னுடைய
லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்.எல். மொபைல் போன்களின்
அறிமுகத்துடன், வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டது மைக்ரோசாப்ட்
நிறுவனம். முதன் முதலாக மடித்து வைத்து எடுத்துச் சென்று, பின் விரித்து
வைத்து செயல்படுத்தக் கூடிய கீ போர்ட் ஒன்றை, அண்மையில் பார்சிலோனாவில்
நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்ட்,
ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம். இது விண்டோஸ்
10 சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுடனும் இயங்கும். இது ஒரு
வயர்லெஸ் கீ போர்ட். புளுடூத் இணைப்பில் இயங்கும். மொபைல் போனில் இயங்கும்
விண்டோஸ் 10 இயக்கத்திலும் இதனை இயக்கலாம்.
இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் அதன் விலை குறித்தும் மைக்ரோசாப்ட் இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த
ஆண்டு, விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்தும் அனைவருக்கும், விண்டோஸ் 10
இலவசமாக அப்டேட் செய்திட வழங்கப்படும் என அறிவித்தது. விண்டோஸ் 10
சிஸ்டத்தின் சில அம்சங்கள், அது பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் அமைப்பினைப்
பொறுத்து வேறுபடும்.
ஏறத்தாழ
20 லட்சம் பேர் விண்டோஸ் இன்ஸைடர் புரோகிராமில் பதிந்து, விண்டோஸ் 10
சோதனைத் தொகுப்பினை சோதித்து வருகின்றனர். இவர்கள், ஏறத்தாழ 9 லட்சம்
பதிவுகளை பின்னூட்டமாக அளித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் பரிசீலிக்கப்பட்டு
முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த புரோகிராமில் பதிந்தவர்களுக்கு,
விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். கார்டனா டூல்,
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படும். இந்த அறிவிப்புகளை
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் துணைத் தலைவர் வெளியிட்டார்.
மொபைல்
போனுக்கான விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பு அண்மையில்
வெளியிடப்பட்டது. இதுதான் இந்த முறையில் முதலாவதாக வெளியிடப்பட்ட தொகுப்பு
என்றும், இது இன்னும் உருவாக்க வளர்ச்சியில் உள்ளது என்றும்
அறிவிக்கப்பட்டது.
நன்றி
Wednesday, 11 March 2015
பாதுகாவலராய் பகா எண்கள்:
கணிதம் அறிவோம்
பள்ளிகளின் கணித வகுப்புகளில் 1,2,3,4,………………………….. என்பவை இயல் எண்கள்
என்றும் இதில் சில எண்களுக்கு ஒன்று மற்றும் அதே எண்ணைத்தவிர வேறு காரணிகள்
இல்லையெனில் அந்த எண்கள் பகா எண்கள் அல்லது முதன்மை எண்கள் (Prime
numbers) என்றும் மற்ற எண்கள் அதாவது இரண்டுக்கு மேற்பட்ட காரணிகளை உடைய
எண்கள் பகு எண்கள் அல்லது கலப்பின எண்கள்(Composite Numbers) என்றும்
கற்பிக்கப்படுகிறது.
பகா எண்கள் : 2,3,5,7,11,13,17,………………………………….
பகு எண்கள் : 4,6,8,9,10,……………………………………………
பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்தப் பகாஎண்களின் பின்னால் மறைந்துள்ளன.
பகா எண்களின் எண்ணிக்கை
இயல் எண்களில் எண்ணற்ற பகா எண்கள் உள்ளன. பகா எண்களின் எண்ணிக்கையை
நிர்ணயிப்பது என்பது பிரபஞ்சத்தின் எல்லையைக் காண்பது போன்றது. மாபெரும்
பகா எண்களைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. அதற்குக் கடின உழைப்பும் நீண்ட
காலமும், அதிசக்தி வாய்ந்த கணினிகளும் மென்பொருளும் தேவை.
பகா எண்களில் பரவல்
இயல் எண்களில் பகா எண்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து
அமையவில்லை. உதாரணமாக 2 மற்றும் 3 க்கும் இடைவெளி ஒன்று, 5க்கும் 7க்கும்
இடைவெளி இரண்டு, 23க்கும் 29க்கும் இடைவெளி 6. இயல் எண்களின் ஊடே மேலே
செல்லச் செல்லப் பகா எண்களின் எண்ணிக்கை குறைவாகவும் அவ்வெண்களுக்கு
இடையேயான இடைவெளி அதிகமாகவும் உள்ளது.
பகா எண்களின் சிறப்பு
1) ஒன்று என்ற எண் பகு எண்ணோ அல்லது பகா எண்ணோ அல்ல.
2) ஒரே இரட்டை படை பகா எண் 2 மட்டுமே.
3) தொடர்ச்சியாக அடுத்தடுத்த எண்கள் பகா எண்களாக அமைந்தவை 2,3 மட்டுமே.
4) (5,7),(11,13),(17,19)………இது போன்ற இரட்டைகள் இரட்டை பகா எண்கள்
எனப்படுகின்றன. அதாவது அடுத்தடுத்த பகா எண்களுக்கிடையேயான இடைவெளி 2 ஆக
இருக்கும்.
5) எந்த ஒரு இயல் எண்ணையும் பகா எண்களின் பெருக்குத் தொகையாக எழுத இயலும். 15=3x5, 20=2x2x5………………
6) எந்த ஒரு இரட்டை படை எண்ணையும் இரு பகா எண்களின் கூட்டுத் தொகையாக எழுத இயலும். 32=3+29, 50=7+43, …………………………..
பகா எண்களில் அழகு
31
331
3331
33331
333331
3333331
33333331
இந்த எண்கள் 18ம் நூற்றாண்டு வரை நிரூபணம் ஆன பகா எண்கள். ஆனால் அடுத்த எண்
333333331 பகா எண் அல்ல. காரணம் 17 x 19607843 = 333333331.
பகா எண்களின் பயன்பாடு
பகா எண்கள் இன்று நம்மைக் காக்கும் பாதுகாவலராக விளங்குகின்றன. வங்கிகளில்
நடைபெறும் பணப்பரிவர்த்தனை, பங்கு சந்தை, ATM மையங்கள் எனப் பல இடங்களில்
சங்கேதக் குறியீடுகள் (passwords) அத்தியாவசியமாக உள்ளன.
இந்தச் சங்கேதக் குறியீடுகளை மற்றவர்கள் உடைத்துக் கண்டுபிடிப்பதைத்
தவிர்க்க இரு பகா எண்களின் பெருக்குத் தொகையை கொண்டு அமைக்கிறார்கள்.
இவ்வாறு அமைக்கப்படும் சங்கேதக் குறியீடுகளில் உள்ள இலக்கங்களின்
எண்ணிக்கையைப் பொருத்து அதைக் கண்டுபிடிக்கச் சில நூறு ஆண்டுகள் முதல்
ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் பகா எண்கள் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கணித மேதை
யூக்ளிட், அதன் பின்னர் வந்த ஆய்லர், கோல்ட்பெக் முதல் தமிழகக் கணித மேதை
இராமானுஜர் வரை பலர் பல உண்மைகளையும், தேற்றங்களையும் வழங்கியிருந்தாலும்.
பகா எண்கள் என்பது கணித அறிஞர்களுக்கு இன்னமும் ஆழ்கடல் ஆய்வாகத்தான்
உள்ளது.
S.ஸ்ரீதர், ஆசிரியர் பயிற்றுநர்,
நன்றி தமிழ் இந்து...
மாணவர்கள் நலம் கருதி..
அன்புடன் சிவா...
Thursday, 5 March 2015
கணினிச் சொற்கள்
அறிவோம் நம் மொழியி ல்
கீ இன் (key in) - உள்ளிடு
கம்ப்யூட்டர் (computer) - கணிப்பொறி, கணினி
கம்ப்யூட்டர் சயின்ஸ் (computer science) - கணிப்பொறியியல்
கம்ப்யூட்டரைஸ் (computerize) - கணினிமயமாக்கு
சேவ் (save) - சேமி
மெமரி யூனிட் (memory unit) - நினைவகம்
சி.பி.யூ (Central Processing Unit) - மையச் செயலகம்
சென்ட்ரல் புராசசர் (central processor) - மையச் செயலி
சாஃப்ட்வேர் (software) - மென்பொருள்
கீபோர்டு (keyboard) - விசைப்பலகை
கன்ட்ரோல் கீ (control key) - கட்டுப்பாட்டு விசை
கன்ட்ரோல் பேனல் (control panel) - கட்டுப்பாட்டகம்
ப்ரோகிராம் (program) - கட்டளைநிரல்
பேக் ஸ்பேஸ் (backspace) - பின்நகர்வு
கர்ஸர் (cursor) - சுட்டி
பீட்டா (beta) - அறிமுகப் பதிப்பு
சிப் (chip) - சில்லு
ஃபான்ட் (font) - எழுத்துரு
கேரக்டர் மேப் (character map) - எழுத்துரு வரைபடம்
கம்ப்யூட்டர் லாங்குவேஜ் (computer language) - கணினி நிரல்மொழி
கம்ப்யூட்டர் யூஸர் (computer user) - கணினிப் பயனர்
டச் ஸ்க்ரீன் (touchscreen) - தொடுதிரை
டச் ஸ்க்ரீன் கம்ப்யூட்டர் (touchscreen computer) - தொடுதிரைக் கணினி
லேப்டாப் (laptop) - மடிக்கணினி
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் (desktop computer) - மேசைக் கணினி
ஷட் டவுன் (shut down) - (கணிப்பொறியை) நிறுத்து, அணை
டிரைவர் (driver) - இயக்கி
ஸ்க்ரீன் (screen) - திரை
கீ (key) - விசை, பித்தான்
க்ளிக் (click) - சொடுக்கு, அழுத்து
ஃபைல் (file) - கோப்பு
ஒபன் (open) - திற
க்ளோஸ் (close) - மூடு
மினிமைஸ் (minimize) - சுருக்கு
மேக்ஸிமைஸ் (maximize) - பெரிதாக்கு
இன்ஸ்டால் (install) - உள்நிறுவு
நன்றி தமிழ் இந்து ......
Subscribe to:
Posts (Atom)