முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Friday, 28 April 2017

உயிர் துளி...கவிதை

உயிர் துளி... ( கடைசி வரி கவிதை)

இயற்கையின் அன்னையின்
பஞ்சபூத
படைப்பில் இரண்டாம்
இடம் உனக்கு...
ஆனால் உலகில் முதன்மை
நீ..

நீரின்றி அமையாது
உலகு..நீயின்றி
இனி இல்லை உலகு.
இது
ஐயனின் கூற்று...

உயிரினம் வாழ்வது
உன்னாலே...
உலகம் வாழ்வதும்
வீழ்வதும் இனி உன்னாலே..

உழவனின்
உயிர்துளி நீ
உயிர்களின் உயிர்துளியும் நீயே..
உயிர்கள் யாவும்
வணங்குவதும்
போற்றுவதும் உன்னை..

நீ இன்றி
உயிர்கள்  இப்பூவியில் இல்லை..நீயின்றி
இனி வாழ்வது யாவும்
அரிது...

செடியும் கொடியும்
மரமும்
மனிதமும் வாழ்வது
உன்னாலே...

நீ (ர்)இன்றி
ஒரு அணுவும்
அசையாது.
நீதான் புவியின்
உயிர் துளி...

₹₹₹₹₹₹₹₹₹₹
நன்புடன்
ஆ.சிவராமகிருஷ்ணன். சேலம்

₹₹₹₹₹₹₹₹₹%₹%

Sunday, 16 April 2017

கடவுள் எங்கே இருக்கிறார்....?

"#கடவுள்_எங்கே_எப்படி_இருக்கிறார்?"

கிருஷ்ண தேவராயர் கேட்ட கேள்விக்கு யாராலேயும் பதில் சொல்ல முடிய வில்லையாம். அப்போது தெனாலி ராமன் முன் வந்து, "அரசே!இதுக்கு நான் விடையளிக்கிறேன்"-னு சொல்லிட்டு, ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, "அரசே இந்த மெழுகு வர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறதுன்னுகேட்டான்..?"
அவர், "அது மேல் நோக்கி காட்டுகிறது. எந்த திசையையும் குறிப்பிட்டுக் காட்டவில்லை"ன்னு சொன்னார்.
"சரி"ன்னு சொல்லிட்டு மெழுகு வர்த்தியை திருப்பி திருப்பி மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக வைத்தான். அப்போதும் தீபம் மேல் நோக்கியே நின்றது.
"அரசே! நாம் தீபத்தை சாட்சியாக ஏற்றுக் கொண்டு, கடவுள் நமக்கு மேலே இருக்கிறார் என்பதை அறிவோமாக. அவர் வேறு எந்த திசையிலும் இல்லை"
"அடுத்து நீங்கள் கேட்ட கேள்வி. கடவுள் எப்படி இருக்கிறார்? இதுக்கு பதில் சொல்லணும்னா எனக்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பால் வேணும்"-னு கேட்டு வாங்கிவந்து, "அரசே! இந்தக் கிண்ணத்திலுள்ள பாலில் கொஞ்சம் தயிர் சேர்த்தால் என்னவாகும்?"
"அது தயிராகும்" என அரசர் பதிலளித்தார்.
"ஆமாம். அந்தத் தயிரைக் கடைந்தால் வெண்ணெய் ஆகும். அந்த வெண்ணெய்யை உருக்கினால் அது நெய் ஆகும். சரிதானே?" என்று அவன் கேட்க அரசர் ஆமோதித்தார்.
"அப்படியானால் இந்தக் கிண்ணத்திலுள்ள பாலுக்குள் தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லாம் இருக்குன்னு ஒத்துக்கறீங்களா?"-ன்னு கேட்டதும் அரசர் "ஆமாம். ஒத்துக்கறேன்."-னு சொன்னார்.
"சரி அரசே! இந்தப் பாலில் எந்த பாகத்தில் தயிரும், எந்த பாகத்தில் மோரும், எந்த பாகத்தில் வெண்ணெயும், எந்த பாகத்தில் நெய்யும் இருக்குன்னு பிரிச்சுக் காட்ட முடியுமா?"ன்னு கேட்க அரசர், "அது எப்படி முடியும்? எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று அடக்கம்" என்றார்.
"அது போல்தால் கடவுள் நம் எல்லோருக்குள்ளும் அடக்கமாக இருக்கிறார். அவர் எங்கும் நீக்கமற எல்லாமாயும் வியாபித்திருக்கிறார். அவர் இல்லாத பொருள் உலகில் எதுவும் இல்லை" என்றான் தெனாலி.
"சரி! இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையளித்தாய். என் மூன்றாவது கேள்விக்கு பதில்? கடவுள் என்ன செய்துகொண்டிருக்கார்?"
"அரசே! நான் உங்கள் இரண்டு கேள்விக்கு சரியாக விடை அளித்து விட்டதால், நான் உங்களுக்கு குருவாகிறேன். நீங்கள் சிஷ்யன் ஆகிறீர்கள். எனவே குரு கீழேயும் சிஷ்யன் மேலேயும் இருப்பது சரியல்ல. நீங்கள் சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து கீழே நில்லுங்கள். நான் அங்கே அமர்ந்து உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்"-னு தெனாலி சொன்னதும், அரசர் அவனை அரியணையில் உட்கார வைத்துவிட்டு கீழே இறங்கி நின்றார்.
உடனே தெனாலி ராமன்,”யாரங்கே?இந்த மதிகெட்ட மன்னனை சிறையிலடைத்து சித்தரவதை செய்யுங்கள்”ன்னு கட்டளை யிட்டான்.
அரசனும் அவையோரும் திகைத்துப் போய் நிற்கவே, தெனாலி சிரித்துக் கொண்டே, “அரசே பயப்படவேண்டாம்.நான் அரசனாக நடித்தேன். அவ்வளவுதான். சற்று முன்னர் தாங்கள் அமர்ந்திருந்த அரியணையில் இப்போது இறைவன் என்னை அமர வைத்து உங்களை என் ஆணைக்கு அடிபணிய வைக்கும் சாதாரண மனிதனாக மாற்றி விட்டார். இதைத்தான் இறைவன் இப்போது செய்தார்.. ஆண்டியை அரசனாக்கவும், அரசனை ஆண்டியாக்கவும் ஆண்டவன் ஒருவனாலேயே முடியும்."
கிருஷ்ணதேவராயர்உண்மை உணர்ந்து இறைவனுக்கும் தெனாலிராமனுக்கும் நன்றி கூறினார்.

நன்றி

தெ. இரவிச்சந்திரன்🙏

Saturday, 8 April 2017

காழ் - குறும்படம்.

அரசுப்பள்ளி மாணவன் நவீன் நடித்த காழ்(Kaazh) குறும்படத்தினை கீழேயுள்ள Youtube இணைப்பில் காணலாம். கருத்துக்கள் அவசியம்...

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜான்ராஜா
இயக்கம் - சுரேஷ்

https://youtu.be/WkXbanTtz_g

மொட்டையின் ரகசியம்...



தினம் ஒரு தகவல்.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

#கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

#கடல்_நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

#வெளியேறும்_வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

#மொட்டை_போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

#நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

#மூன்று_வயதில்_ஓர்_மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

#ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

நன்றி பால. ரமேஷ்....

Friday, 7 April 2017

நெசவாளியின் திறமை....சிறு கதை...

*துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .*

துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

*நெசவாளி சொன்னான்:*
‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத் தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

ஒரு தேசத்தை நிர்வாகம் செய்வதற்கு இப்படியானவர்களே தேவை என்று முடிவு செய்த அரசன், அந்த நெசவாளியைத் தனது நாட்டின் மந்திரியாக நியமித்தான் . . .

Monday, 3 April 2017

தொப்புள் ( நாபி)

தொப்புளில் எண்ணை போடுங்கள்

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை!

இணையப்பகிர்வு

Sunday, 2 April 2017

கர்வம்.....சிறுகதை...

தினம் ஒரு குட்டிக்கதை.

ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப் பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.
அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன். 'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும் முயற்சிக்கிறேன்'னான். 'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட 'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?" ன்னாரு.
மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு "சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி தெரியலை' ன்னான்.
அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?' என்றார்.
மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு தெரியலை' ன்னான்.
சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?' என்றார்.
மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும் சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.
அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம் என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு, 'உன் அறிவை மெச்சுகிறேன்..இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை' னு பரிசளித்தான்.
ஆனா மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத் தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு இப்போ தோணுது' என்றான்.
அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே இல்லையே.." என்றார்.
அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான் இருந்தாலும் அந்த ஒளியைப் பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா? அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட உயர்வானதுன்னு தோணுது.
கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும் தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட அதுதான் உயர்வானதுன்னு தோணுது..
தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான்.ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும் ஆடைகள்த்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்
அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.
நன்றி ரமேஷ்...